மூடுபனி காரணமாக தெபெடுவில் ஆறு பள்ளிகள் தற்காலிகமாக மூடல்

top-news
FREE WEBSITE AD

கூச்சிங், ஆக. 12-

 மலேசியா–இந்தோனேசியா எல்லைக்கு மிக அருகில் உள்ள சரவாக் மாநிலத்தின் தெபெடுவில், காற்று மாசு குறியீடு (IPU) 200-ஐத் தாண்டியதைத் தொடர்ந்து ஆறு பள்ளிகள் இன்று முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

புகைமூட்டத்தால் மாணவர்கள் மற்றும் பள்ளிப் பணியாளர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நலனை உறுதி செய்யும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சரவாக் மாநிலக் கல்வித் துறை (JPNS) இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சின் (KPM) நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப பள்ளிகளை மூடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *