60 வயதான டிம் வால்ஸ் ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பு!

top-news

அமெரிக்காவில் வரும் நவம்பர் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.பைடன் முதலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட இருந்தார். ஆனால், அவரது உடல்நிலை காரணமாக போட்டியிட வேண்டாம் என பலரும் வற்புறுத்தினர். இதனால் கடந்த மாதம் அதிபர் தேர்தலில் இருந்து அவர் விலகினார். தற்போது துணை ஜனாதிபதியாக உள்ள கமலா ஹாரிஸை ஜனாதிபதி வேட்பாளராக அவர் பரிந்துரைத்தார்.

இதற்கிடையில், அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்க போதுமான வாக்குகளைப் பெற்றுள்ளார். இந்நிலையில் ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளரை கமலா ஹாரிஸ் அறிவித்துள்ளார். அதன்படி, ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக டிம் வால்ஷை கமலா ஹாரிஸ் அறிவித்துள்ளார். டிம் வால்ஸ் அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தின் ஆளுநராக உள்ளார். 60 வயதான டிம் வால்ஸ் மின்னசோட்டா மாநில எம்பியாகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.




https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *