முதல் நாளிலேயே 60 ஆயிரம் பயணிகள்! ஷா ஆலம் LRT 3 -க்கு மக்களின் வலுவான ஆதரவு

top-news

கோலாலம்பூர், ஜூலை 1: ரேபிட் கே.எல்-இன் புதிய ரயில் பாதைக்கு பொதுமக்களிடையே வலுவான வரவேற்பு இருப்பதை பிரதிபலிக்கும் வகையில்,  தனது முதல் நாள் செயல்பாட்டிலேயே 60,000-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் சேவைகள், இணைப்புப் பேருந்துகள் மற்றும் ரேபிட் கே.எல் ஆன்-டிமாண்ட் (ROD) சேவைகள் உட்பட, ஷா ஆலம் லைன் நெட்வொர்க்கின் மொத்தப் பயன்பாட்டையே இந்த எண்ணிக்கை உள்ளடக்கியதாக ரேபிட் கே.எல் நேற்று தெரிவித்துள்ளது.

ரயில் சேவையில் மொத்தம் 58,865 பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன என்று ரேபிட் கே.எல் கூறியது.

செயல்பாட்டின் முதல் நாளிலேயே கிடைத்த இந்த வலுவான வரவேற்பு, இந்த புதிய போக்குவரத்து வசதிக்கான வலுவான தேவையை நிரூபிக்கிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது..

இது ஷா ஆலம் வழித்தடத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை பிரதிபலிப்பது மட்டுமல்லாமல், பெட்டாலிங் ஜெயா, ஷா ஆலம் மற்றும் கிள்ளான் முழுவதும் உள்ள குடியிருப்புப் பகுதிகள், வேலைவாய்ப்பு மையங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிக மையங்களை இணைக்கும் ஒரு ரயில் வலையமைப்பின் தேவையையும் எடுத்துக்காட்டுகிறது என்று அது கூறியது!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *