மலேசியர்கள் தாய்லாந்து செல்ல 60 நாட்களுக்கு இலவச விசா!

top-news
FREE WEBSITE AD



பெட்டாலிங் ஜெயா, ஜூன் 1: சுற்றுலாவை மேம்படுத்த பாங்காக்கின் முக்கிய நடவடிக்கையாக இன்று முதல் 60 நாட்களுக்கு விசா இல்லாமல் தாய்லாந்து செல்ல  மலேசியர்களுக்கு தாய்லாந்து அரசு அனுமதி வழங்கியுள்ளது.

முந்தைய விசா இல்லாத காலம் 30 நாட்களாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விசா விலக்குகள், விசா-ஆன்-அரைவல் பட்டியல்களை விரிவுபடுத்துதல் மற்றும் புதிய விசா வகையை அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான பல விசா வசதி நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தாய்லாந்து அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் சாய் வச்சரோன்கே கூறினார்.

மலேசியா உட்பட 93 நாடுகளைச் சேர்ந்த பார்வையாளர்கள் 60 நாட்கள் வரை தங்குவதற்கு விசா தேவையில்லாமல் தாய்லாந்திற்குள் நுழையலாம், இது இன்று முதல் அமலுக்கு வருகிறது!


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *