ஒரே நாளில் 6,824 சம்மன்கள்! - JPJ KEDAH
- Sangeetha K Loganathan
- 30 Oct, 2024
கெடாவில் போக்குவரத்து குற்றப்புலனாய்வுத் துறையினர்கள் சோதனைகள் நடத்தினர். 48,250 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டதாகவும் 2,743 வாகனங்கள் பல்வேறு போக்குவரத்து விதிமுறைகளை மீறியதில் 6,824 சம்மன்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் இம்மாதிரியானச் சோதனைகள் நடத்தப்படுவதாகக் கெடா மாநிலப் போக்குவரத்து குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் Stien Van Lutam தெரிவித்தார். லாரிகள் பேருந்துகள் மோட்டார் சைக்கிள்கள் வாகனங்கள் ஓட்டுநர் உரிமம் இல்லாதது, காப்புரிமம் புதுப்பிக்காதது போன்ற குற்றங்களுக்கு 6824 சம்மன்கள் வழங்கப்பட்டதை Stien Van Lutam உறுதிப்படுத்தினார்.
JPJ Kedah melakukan pemeriksaan terhadap 48,250 kenderaan, mengeluarkan 6,824 saman kepada 2,743 kenderaan atas pelbagai pelanggaran peraturan. Pemeriksaan serupa akan diteruskan setiap bulan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *