7.8 சதவீத ஜி.டி.பி. வளர்ச்சி மோடியின் தலைமைக்கு சாட்சி – அமித்ஷா புகழாரம்

top-news

புதுடெல்லி, செப். 1 –

2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.8 சதவீதமாக பதிவாகியுள்ள நிலையில், இது பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் உறுதியான சான்று என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது சமூக ஊடகப் பதிவில், பிரதமர் மோடி தலைமையிலான அரசின் கீழ் இந்திய பொருளாதாரம் தொடர்ந்து வலுவடைந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

உலக அளவில் பொருளாதார நிச்சயமற்ற தன்மை நிலவி வரும் சூழ்நிலையிலும், இந்தியா தனது பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து தக்கவைத்திருப்பது குறிப்பிடத்தக்க சாதனை என்றும் அவர் கூறினார்.

2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் 7.8 சதவீத வளர்ச்சியை இந்தியா பதிவு செய்திருப்பது, பல்வேறு உலகளாவிய பொருளாதார சவால்களை எதிர்கொண்டு நாட்டின் பொருளாதாரம் வலுவுடன் முன்னேறி வருவதை காட்டுவதாக அமித்ஷா தெரிவித்துள்ளார்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *