70வது தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் அறிவிப்பு - விருதுகளை அள்ளிய அமரன்!
- Muthu Kumar
- 24 Feb, 2026
கேரளாவின் கொச்சியில் உள்ள அட்லக்ஸ் கன்வென்ஷன் சென்டரில், தென்னிந்திய திரைப்படங்களுக்கான 70வது பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா, பிப்ரவரி 21 ஆம் தேதி நடைபெற்றது.
இந்த விருது வழங்கும் விழாவில் தமிழ் , தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள சினிமாவில் பலருக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான நட்சத்திரங்கள் , திரைத்துறையை சார்ந்தவர்கள் பலரும் கலந்து கொண்டனர். ஆடுஜீவிதம் , அமரன், புஷ்பா-2 ஆகிய திரைப்படங்கள் அதிக அளவில் விருதுகளை வாங்கி குவித்தன.
தமிழ் சினிமாவில் விருது பெற்றவர்கள் விவரம்:
1.தமிழில் சிறந்த திரைப்படம் - அமரன்
2. சிறந்த படம் (விமர்சகர்கள்) - மெய்யழகன்
3.சிறந்த இயக்குனர்- ராஜ்குமார் பெரியசாமி (அமரன்) , பி.எஸ். வினோத்ராஜ் (கொட்டுக்காளி)
4. சிறந்த நடிகர் - சிவகார்த்திகேயன் (அமரன்)
5. சிறந்த நடிகர் (விமர்சகர்கள்) - அரவிந்த் சுவாமி (மெய்யழகன்)
6.சிறந்த நடிகை - சாய் பல்லவி (அமரன்)
7.சிறந்த நடிகை (விமர்சகர்கள்) - அன்னா பென் (கொட்டுக்காளி)
8.சிறந்த துணை நடிகர் - கார்த்தி(மெய்யழகன்)
9.சிறந்த துணை நடிகை - பார்வதி (தங்கலான்) மற்றும் ஸ்வாசிகா (லப்பர் பந்து)
10. சிறந்த இசையமைப்பாளர்- ஜீவி.பிரகாஷ் (அமரன்)
11. சிறந்த பாடலாசிரியர் - உமாதேவி , யாரு இவன் யாருக்காக (மெய்யழகன்)
12. சிறந்த பின்னணிப் பாடகர் : ஹரிசரண் , ஹே மின்னலே (அமரன்)
13.சிறந்த பின்னணிப் பாடகி : ஸ்வேதா மோகன், ஹே மின்னலே(அமரன் )
14.சிறந்த ஒளிப்பதிவு - சி.எச்.சாய் (அமரன்)
15. சிறந்த அறிமுக இயக்குனர் - சுரேஷ் மாரி (ஜே பேபி) மற்றும் தமிழரசன் பச்சமுத்து(லப்பர் பந்து)
16. சிறந்த அறிமுக நடிகர் - ஹிருது ஹாரூன் (தக்ஸ்)
17.சிறந்த அறிமுக நடிகை - ஸ்ரீ கௌரி பிரியா (லவ்வர்)
18. சிறந்த நடிப்பு - விக்ரம் (தங்கலான்)
தமிழில் அதிகபட்சமாக அமரன் திரைப்படம் 7 பிரிவிலும் , மெய்யழகன் 4 பிரிவிலும் விருதுகளை வென்றுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



