பதின்ம வயது பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த 71 வயது முதியவர்!
- Shan Siva
- 06 Oct, 2026
ஜார்ஜ் டவுன், அக் 6: ஷாப்பிங் மால் கழிவறையில் பதின்ம
வயதுப் பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும்
71 வயது முதியவர் ஒருவர் மீது அமர்வு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு
செய்யப்பட்டன.
நீதிபதி ஜுரைடா
அப்பாஸ் முன்னிலையில், ஹோக்கியன் மொழியில் வாசிக்கப்பட்ட இரண்டு
குற்றச்சாட்டுகளையும் மறுத்து, சுவா செங் செங் (Chuah Cheng Seng) என்ற அந்த நபர் விசாரணையை எதிர்கொள்ள விருப்பம் தெரிவித்தார்.
முதல்
குற்றச்சாட்டின்படி, அக்டோபர் 1-ஆம் தேதி மாலை 4.30 மணியளவில், இங்குள்ள ஷாப்பிங் மால் ஒன்றின்
இரண்டாவது தளத்தில் உள்ள ஆண்களுக்கான கழிவறையில் 18 வயதுப் பெண்ணை பாலியல்
வன்புணர்வு செய்ததாக சுவா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றவியல்
சட்டத்தின் பிரிவு 376(1)-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள்
வரை சிறைத்தண்டனையும் பிரம்படி தண்டனையும் விதிக்கப்படலாம்.
இரண்டாவது
குற்றச்சாட்டின்படி, அதே இடத்தில் இயற்கைக்கு முரணான பாலியல்
உறவில் ஈடுபட்டதாக சுவா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது; இது குற்றவியல் சட்டத்தின் பிரிவு 377C-ன் கீழ் ஒரு குற்றமாகும்.
இப்பிரிவின் கீழ்
குற்றம் நிரூபிக்கப்பட்டால், 5 முதல் 20
ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் பிரம்படி தண்டனையும் விதிக்கப்படலாம்.
நீதிபதி ஜுரைதா, இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் சேர்த்து ஒருநபர்
உத்தரவாதத்துடன் மொத்தம் RM14,000 பிணைத் தொகையை நிர்ணயித்தார்.
மேலும், வழக்கு முடியும் வரை ஒவ்வொரு மாதத்தின்
முதல் நாளிலும் அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்றும், தனது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில்
ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் சுவாவுக்கு உத்தரவிட்டார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

