நாடு முழுவதும் 7,114 ‘5ஜி’ தளங்கள் நிறைவுபெற்றது! - தியோ நீ சிங்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 4: நாடு முழுவதும் இதுவரை 7,114 5ஜி தளங்கள் நிறைவடைந்துள்ள நிலையில்மக்கள் தொகை நிறைந்த பகுதிகளில் 5ஜி தொடர்பு அலையின் சேவை தற்போது 81.7 விழுக்காட்டை எட்டியுள்ளாதாக தகவல் தொடர்புத்துறை துணையமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்தார்.

தற்போதைக்கு, 5ஜி சேவைக்கான கட்டுமானப் பணிகள் அதிக பொருளாதார நடவடிக்கைகள் கொண்ட நகர்ப்புறங்களில் நடைபெற்று வருகின்றனஅதே நேரத்தில் கிராமப்புறங்கள் உட்பட பிற பகுதிகளுக்கும் அதன் விரிவாக்கம் தொடங்கியுள்ளது என்று அவர் கூறினார்.

கிராமப்புறங்களில் அதிவேக 5ஜி சேவைக்கான அணுகல் விகிதத்தை இன்னும் விரிவாக்க, கூடுதல் துணை மின்நிலையங்களை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் சாத் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *