மலேசியா வருகை தரும் பிரதமர் மோடி முன்னிலையில் 800 கலைஞர்கள் நடனம்!

top-news
FREE WEBSITE AD

மலேசியாவில்  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் ஒன்றாக 800 நடனக் கலைஞர்கள் சேர்ந்து நடன நிகழ்ச்சி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி இன்று பிப்ரவரி 7 மற்றும் நாளை பிப்ரவரி 8-தேதிகளில் மலேசியாவுக்குப் வருகை தர உள்ளார். இந்த நிலையில், இந்தியப் பிரதமர் மோடி மற்றும் நம் நாட்டு பிரதமர் அன்வார் இப்ராஹிம் முன்னிலையில் 800 நடனக் கலைஞர்கள் சேர்ந்து, தொடர்ச்சியாக 5 நிமிடங்கள் நடன நிகழ்ச்சி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்திய புலம்பெயர்ந்தோரால் நிகழ்த்தப்படும் பல்வேறு வகையான இந்திய பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற நடனங்களைக் குறிக்கும் ஒற்றை நடனக் கலையில் அதிக எண்ணிக்கையிலான நடனக் கலைஞர்கள் என்ற தலைப்பில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. அயல்நாட்டு மண்ணில் இந்திய பாரம்பரியம் பாதுகாக்கப்படுவதைக் காண்பிக்கும் நோக்கமாக இந்த நிகழ்ச்சி அமையவுள்ளது.

பரதநாட்டியம், ஒடிசி, கதக், கதகளி, மோகினியாட்டம், குச்சிப்புடி, யக்ஷகானா ஆகியவற்றின் கலவையும், தமிழ், லாவணி, பஞ்சாபி, ராஜஸ்தானி, ஒடியா, பிஹு நாட்டுப்புற மரபுகளின் தாளங்களும் இடம்பெறுகின்றன.

இந்த நடன நிகழ்ச்சியை மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பெற வைக்க முயற்சிப்பதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். மேலும், நிகழ்ச்சி முடிந்தவுடனேயே அதிகாரப்பூர்வ சான்றிதழை வழங்க வேண்டும் என்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *