இந்தியாவில் 84,318 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன; அவற்றில் 93 சதவீதம் அரசுப் பள்ளிகள் – மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு

top-news
FREE WEBSITE AD

சென்னை, செப். 3 –

இந்தியாவில் கடந்த ஏழு ஆண்டுகளில் 84,318 பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 93 சதவீதம் அரசுப் பள்ளிகள் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில், மத்திய அரசின் கல்விக் கொள்கைகள் காரணமாக அரசுப் பள்ளிக் கல்வி கட்டமைப்பு கடுமையான பாதிப்பை சந்தித்து வருவதாகக் குற்றஞ்சாட்டினார்.

மூடப்பட்ட பள்ளிகளில் சுமார் 78,502 அரசுப் பள்ளிகள் இடம்பெற்றுள்ளதாகவும், அதே காலக்கட்டத்தில் 15,461 தனியார் சுயநிதிப் பள்ளிகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தமிழகத்திலும் சுமார் 1,976 பள்ளிகள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மேலும், தேசிய கல்விக் கொள்கை மற்றும் பிஎம் ஸ்ரீ திட்டத்தை தமிழ்நாடு ஏற்காததை காரணமாகக் கொண்டு, கடந்த மூன்று ஆண்டுகளில் மாநிலத்திற்கு வழங்க வேண்டிய ரூ.5,109 கோடி கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக மாணிக்கம் தாகூர் குற்றஞ்சாட்டினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *