திருப்பதி கோவிலில் ஒரே நாளில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்
- Surendran Sumdraraj
- 20 Jul, 2026
ஆந்திரப் பிரதேசம், ஜூலை 20-
திருப்பதி திருமலையில் அமைந்துள்ள ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விடுமுறை நாட்கள் மற்றும் சுப முகூர்த்த தினங்களை முன்னிட்டு, ஒரே நாளில் 90 ஆயிரத்து 546 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதுடன், இலவச தரிசனத்திற்கு வந்தவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட தகவலின்படி, அன்றைய தினம் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ.3.93 கோடியாக பதிவாகியுள்ளது. மேலும், 36 ஆயிரத்து 303 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். லட்டு பிரசாதம் 4.61 லட்சம் விற்பனையாகியுள்ளதுடன், அன்னபிரசாத சேவையை 2.54 லட்சம் பக்தர்கள் பயன்படுத்தியுள்ளனர். மருத்துவ சேவைகளை 3,162 பக்தர்கள் பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



