RON97 ரக பெட்ரோலின் விலை 15 காசுகள் குறைகிறது!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, செப் 11: RON97 ரக பெட்ரோலின் விலை நாளை முதல் நாடு முழுவதும் லிட்டருக்கு RM3.40 இலிருந்து RM3.25 ஆக மேலும் 15 காசுகள் குறைக்கப்படும் என்று நிதி அமைச்சு இன்று அறிவித்துள்ளது.

 கடந்த வாரம் RON97 ரக பெட்ரோலின் விலை லிட்டருக்கு RM3.42 இலிருந்து RM3.40 ஆக இரண்டு காசுகள் குறைக்கப்பட்டது.

தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை லிட்டருக்கு RM3.16 இலிருந்து RM3.01 ஆக 15 காசுகள் குறைக்கப்படும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

RON95 ரக பெட்ரோலின் விலை லிட்டருக்கு RM2.05 ஆக இருக்கும், அதே சமயம் கிழக்கு மலேசியாவில் டீசல் லிட்டருக்கு RM2.15 ஆக சில்லறை விற்பனை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த விலை செப்டம்பர் 18 வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!

 

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *