உயிரிழந்த குட்டியை முதுகில் சுமந்து நீந்திய டால்பின்
- Surendran Sumdraraj
- 05 Aug, 2026
ஆஸ்திரேலியா, ஆக. 5-
உயிரிழந்த தனது குட்டியை முதுகில் சுமந்தபடி தாய் டால்பின் ஒன்று பல நாட்கள் நீந்திய காட்சி இணையத்தில் வைரலாகி, உலகம் முழுவதும் உள்ள மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேற்கு ஆஸ்திரேலியாவின் கடல் பகுதியில், ஃபிராகில் (Fraggle) என அழைக்கப்படும் ஒரு பாட்டில்நோஸ் டால்பின் தனது பிறந்து சில வாரங்களே ஆன குட்டியை இழந்த பின்னரும், அதன் உடலை நீரில் மூழ்க விடாமல் தன்னுடன் சுமந்து சென்றதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ட்ரோன் கேமரா மூலம் பதிவு செய்யப்பட்ட இந்த காட்சியில், தாய் டால்பின் தனது உயிரிழந்த குட்டியை மீண்டும் மீண்டும் மேலே தூக்கி சமநிலைப்படுத்தி நீந்துவது காணப்பட்டது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பலரின் மனதை உருக்கியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



