தாய்லாந்தில் 65 அடி நீளம் கொண்ட புதிய டைனோசர் இனம் கண்டுபிடிப்பு
- Surendran Sumdraraj
- 11 Jul, 2026
பாங்காக், ஜூலை 11-
தாய்லாந்தில் சுமார் 65 அடி நீளம் கொண்ட பெரிய டைனோசர் இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் ஓடுதளத்தின் நீளத்திற்கு இணையான அளவு கொண்ட இந்த டைனோசர், தொல்லுயிரியல் ஆய்வாளர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Uragasaurus kalasinensis என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய இனம், வடகிழக்கு தாய்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதுகெலும்பு fossil அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த டைனோசர், நீண்ட கழுத்து கொண்ட தாவர உண்ணி sauropod வகையைச் சேர்ந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சுமார் 143 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு Jurassic காலத்தில் இது வாழ்ந்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கண்டுபிடிக்கப்பட்ட எலும்பில் காணப்பட்ட தனித்துவமான அமைப்புகள், இதுவரை அறியப்பட்ட பிற டைனோசர் இனங்களிலிருந்து வேறுபட்டதாக இருப்பதால், இதை புதிய இனமாக அறிவிக்க ஆய்வாளர்கள் முடிவு செய்தனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



