பாடல் வரியைப் போலவே நிகழ்ந்த சோகம்: ஜிம்முக்கு வெளியே பிரபல பாடகர் அங்கித் பால்யன் சுட்டுக்கொலை

top-news
FREE WEBSITE AD

உத்தரப் பிரதேசம்: பிரபல ஹரியான்வி பாடகரும், நடிகரும், யூடியூபருமான அங்கித் பால்யன் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தின் சி.பி. குப்தா காலனி பகுதியில் ஆகஸ்ட் 26ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றது. உடற்பயிற்சி கூடத்துக்குச் சென்றுவிட்டு அங்கித் பால்யன் வெளியே வந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அவரை குறிவைத்து சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது.

துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அங்கித் பால்யன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

பாடகராக மட்டுமின்றி நடிகராகவும், சமூக வலைதள படைப்பாளராகவும் அறியப்பட்ட அங்கித் பால்யனை யூடியூப்பில் பல லட்சம் பேர் பின்தொடர்ந்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது திடீர் மரணம் ஹரியான்வி இசை ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *