RM450,000 பிணைத் தொகை செலுத்த தடுத்து வைக்கப்பட்ட அறையிலிருந்து வெளியே வந்த அப்துல் அசீஸ்
- Surendran Sumdraraj
- 09 Sep, 2026
கோலாலம்பூர், செப். 9 –
தபோங் ஹாஜி வாரியத்தின் முன்னாள் தலைவர் டத்தோ ஸ்ரீ அப்துல் அசீஸ் அப்துல் ரஹீம், RM450,000 பிணைத் தொகை தொடர்பான நடைமுறைகளை நிறைவு செய்வதற்காக இன்று கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள தடுத்து வைக்கப்பட்ட அறையிலிருந்து வெளியே அழைத்து வரப்பட்டார்.
60 வயதான அப்துல் அசீஸ், கைதி அணியும் ஊதா நிற உடையுடன், கைகளில் விலங்கு பூட்டப்பட்ட நிலையில் காணப்பட்டார்.
பிற்பகல் சுமார் 2 மணியளவில் போலீஸ் அதிகாரிகளின் பாதுகாப்புடன் நீதிமன்ற வளாகத்தின் உள் வழித்தடம் வழியாக அவர் பதிவாளர் அலுவலகத்தின் கட்டணம் மற்றும் பிணை நடைமுறை மேற்கொள்ளும் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அவர் நீதிமன்றத்தில் நிர்ணயிக்கப்பட்ட RM450,000 பிணைத் தொகைக்கான நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்காகவே தடுத்து வைக்கப்பட்ட அறையிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

