பெரிகாத்தான் நேஷனல் முடிவுகளில் தலையீடு செய்கிறேன் என்பது தவறு – அப்துல் ஹாடி அவாங் மறுப்பு
- Surendran Sumdraraj
- 04 Sep, 2026
கோத்தா பாரு, செப். 4 –
பாஸ் கட்சித் தலைவர் என்ற தனது பதவியைப் பயன்படுத்தி பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் முடிவுகளில் தலையீடு செய்கிறார் என்ற குற்றச்சாட்டை பாஸ் தலைவர் டான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் மறுத்துள்ளார்.
கோத்தா பாருவில் நடைபெற்ற பாஸ் கட்சியின் 72-ஆவது ஆண்டு மாநாட்டை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணியில் எடுக்கப்படும் முடிவுகள் ஒரே நபரின் விருப்பப்படி அல்லாமல் ஆலோசனை மற்றும் கூட்டங்களின் மூலம் எடுக்கப்படுகின்றன என்று தெரிவித்தார்.
பாஸ் கட்சி ஜனநாயக நடைமுறைகளை பின்பற்றுவதாகவும், முக்கிய முடிவுகள் எடுக்கப்படுவதற்கு முன் தலைவர்களும் உறுப்பினர்களும் தங்கள் கருத்துகளைத் திறந்தவெளியில் தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
“நான் பெரிகாத்தான் நேஷனல் முடிவுகளில் தலையீடு செய்கிறேன் என்பது உண்மையல்ல. எங்களின் முடிவுகள் ஆலோசனை மற்றும் கூட்டங்களின் அடிப்படையில் எடுக்கப்படுகின்றன. திறந்த விவாதமும் ஜனநாயகமும் பின்பற்றப்படுகின்றன,” என்று அப்துல் ஹாடி தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



