தபோங் ஹாஜி ஊழல் விவகாரம் - முன்னாள் அமைச்சர் கைது!
- Shan Siva
- 02 Sep, 2026
புத்ராஜெயா, செப் 2: தபோங் ஹாஜி தொடர்பான அரச விசாரணை ஆணையத்தின் (RCI) அறிக்கையின் கண்டுபிடிப்புகள் குறித்த தனது விசாரணையின் ஒரு பகுதியாக, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) ஒரு முன்னாள் அமைச்சரைக் கைது செய்துள்ளது.
60 வயதுகளில் உள்ள அந்த நபர், இங்குள்ள MACC தலைமையகத்தில் தனது வாக்குமூலத்தை அளிக்க வந்தபோது, நேற்று மாலை சுமார் 4.30 மணியளவில் கைது செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.
MACC தலைமை ஆணையர் டத்தோ ஸ்ரீ அப்துல் ஹலீம் அமான் இந்தக் கைது நடவடிக்கையை உறுதிப்படுத்தினார்.
இந்த வழக்கு MACC சட்டம் 2009-இன் பிரிவு 16(a)(A)-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.
சந்தேக நபர் இன்று நீதிமன்றக் காவல் மனுவுக்காக புத்ராஜெயா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



