20 வருடங்களுக்கு பின் ரீ-ரிலீசான 'சச்சின்'!

top-news

இயக்குனர் ஜான் மகேந்திரன் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் 2005-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் சச்சின்.இந்த திரைப்படம், ரிலீஸ் ஆகி 20வது ஆண்டை நிறைவு செய்வதை சிறப்பிக்கும் விதமாக, இந்த படத்தின் தயாரிப்பாளர் கலை புலி தாணு, 'சச்சின்' படத்தை ரீ-ரிலீஸ் செய்துள்ளார்.

20 வருடங்களுக்கு பின்னர் இப்படம் ரிலீஸ் ஆனாலும் கூட, இப்படி புதிய படத்தை ரசிகர்கள் வரவேற்பார்களோ அதே போல் வரவேற்று கொண்டாடி வருகிறார்கள். இதுவரை சுமார், ரூ.10 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

காதல் மற்றும் காமெடி கான்செப்டில் வெளியான சச்சின் படத்தில், தளபதி விஜய்க்கு ஜோடியாக,ஷாலினி கதாபாத்திரத்தில், நடிகை ஜெனிலியா டி'சோசா நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது சச்சின் ரீ-ரிலீசுக்கு தளபதி விஜய் ரசிகர்கள் கொடுத்து வரும் வரவேற்புக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த காணொளியில், ஜெனிலியா வணக்கம் தளபதி ரசிகர்களே! எப்படி இருக்கீங்க? நான் உங்க ஷாலினி. 20 வருஷத்துக்குப் பிறகு சச்சின் மீண்டும் தியேட்டரில் வருவதைப் பார்த்து நான் ரொம்பவே சந்தோஷத்தில் உள்ளேன். அதுக்குக் கிடைக்கும் அன்பும் அபாரமானது. அன்றைய வரவேற்பு இன்று போலவே மாயாஜாலமாக இருக்கிறது. நான் உண்மையிலேயே நெகிழ்ச்சியடைந்தேன். சச்சினை ஒரு திருவிழா மாதிரி கொண்டாடியதற்கு என் மனதார நன்றி ." என கூறியுள்ளார். 

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *