வியன்னா ஓபன் டென்னிஸில் ஜாக் டிராபர் மற்றும் ஜப்பான் ஓபன் டென்னிஸில் குயின்வென் ஜெங் சாம்பியன்!

top-news

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் ஜப்பானில் நடைபெற்றது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் சோபியா கெனின், சீன வீராங்கனை குயின்வென் ஜெங் உடன் மோதினார்.

இதில் குயின்வென் ஜெங் 7-6 (7–5), 6–3 என்ற நேர் செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.

ஏற்கனவே இவர் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றுப் போட்டி நேற்று நடைபெற்றது.

பிரிட்டனின் ஜாக் டிராபர், ரஷியாவின் கரன் கச்சனாவ் உடன் மோதினார்.

இதில் ஜாக் டிராபர் 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வென்று கோப்பையை வென்றார்.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *