ரஜினியுடன் செல்பி எடுத்த நெகிழ்ச்சியான அனுபவம் – கயாடு லோஹர் பகிர்வு
- Surendran Sumdraraj
- 04 Sep, 2026
சென்னை, செப். 4 –
விமானப் பயணத்தின் போது நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்து அவருடன் செல்பி எடுத்த அனுபவத்தை நடிகை கயாடு லோஹர் பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்த அந்த புகைப்படம் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.
இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய கயாடு லோஹர், ஆரம்பத்தில் வேறு இருக்கையில் அமர்ந்திருந்ததாகவும், அங்கு சவுகரியமாக இல்லாததால் தனது இருக்கையை மாற்றியதாகவும் தெரிவித்தார். அப்போது தான் அருகில் ரஜினிகாந்த் அமர்ந்திருப்பதை கவனித்ததாகக் கூறினார்.
விமானம் தரையிறங்கியதும் அஷ்வத்துக்கு தொலைபேசியில் அழைத்து, ரஜினியிடம் தன்னை அறிமுகப்படுத்தி வைக்குமாறு கேட்டதாகக் கயாடு தெரிவித்தார். அதற்கு, நீங்களே சென்று பேசுங்கள்; ஒருவேளை அவருக்கே உங்களைத் தெரிந்திருக்கலாம் என அவர் கூறியதாக நினைவுகூர்ந்தார்.
அதன்பின் ரஜினியிடம் சென்று, “நான் ‘டிராகன்’ படத்தின் கதாநாயகி” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதாகவும், அதற்கு ரஜினி, நீங்கள் நேரில் பார்க்க வித்தியாசமாக இருக்கிறீர்கள் என்று கூறியதாகவும் கயாடு தெரிவித்தார்.
பின்னர் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டபோது, புகைப்படம் சரியாக வந்திருக்கிறதா என ரஜினியே பார்த்துக் கொள்ளச் சொன்னதாக கயாடு மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



