சிறையில் நடிகை பவித்ரா கவுடாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு
- Surendran Sumdraraj
- 19 Aug, 2026
பெங்களூரு: ரேணுகாசாமி கொலை வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை பவித்ரா கவுடாவுக்கு திடீரென காய்ச்சல் மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதனால், காணொலி காட்சி மூலம் நடைபெற்ற வழக்கு விசாரணையில் அவரால் ஆஜராக முடியவில்லை.
ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் மற்றும் அவரது தோழியான நடிகை பவித்ரா கவுடா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சிறையில் நடத்தப்பட்ட சோதனைகளைத் தொடர்ந்து பவித்ரா கவுடா தனி அறையில் அடைக்கப்பட்டிருந்ததாகவும், பின்னர் அவர் சாதாரண அறைக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்காக பவித்ரா கவுடா காணொலி காட்சி மூலம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியிருந்தது. ஆனால், அவருக்கு காய்ச்சல் மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டதால் விசாரணையில் பங்கேற்க முடியவில்லை.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



