நடிகர்களைக் காட்டிலும் நடிகைகளே அதிக சவால்களை எதிர்கொள்கிறார்கள்: காஜல் அகர்வால்
- Surendran Sumdraraj
- 19 Aug, 2026
சென்னை: திரைத்துறையில் நடிகர்களைக் காட்டிலும் நடிகைகளே அதிக சவால்களை எதிர்கொள்வதாக நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். குறிப்பாக, திருமணத்துக்குப் பிறகு நடிகைகள் எதிர்கொள்ளும் நிலை மாற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த காஜல் அகர்வால், திருமணத்துக்குப் பிறகு திரைப்படங்களில் நடிப்பதை ஓரளவு குறைத்திருந்தார். தற்போது மீண்டும் திரைப்படங்களில் தீவிரமாக நடித்து வருவதுடன், கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
திரைத்துறையில் தனக்கு இருக்கும் சிறிய அதிருப்தி குறித்து பேசிய அவர், நடிகர்களைவிட நடிகைகள் அதிகமான சவால்களை எதிர்கொள்வதாகக் கூறினார்.
குறிப்பாக, ஒரு நடிகைக்கு திருமணமாகிவிட்டால் அவரது திரைப்பயணம் முடிந்துவிட்டதாக கருதும் மனநிலை இன்னும் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். நடிகைகள் நல்ல மார்க்கெட்டில் இருந்தாலும், திருமணத்துக்குப் பிறகு அவர்களை ஓரங்கட்டவும், அவர்களின் வாய்ப்புகளை குறைக்கவும் முயற்சிகள் நடப்பதாக அவர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



