கச்சாங் பூத்தே விற்பவராக" இருந்திருந்தால் அவதூறு வழக்கு தொடர்ந்திருக்க மாட்டேன்-டாக்டர் மகாதீர் முகமட்!
- Muthu Kumar
- 29 Oct, 2024
கோலாலம்பூர், அக் 29:
அஹ்மத் ஜாஹித் ஹமிடி சாலையோர கச்சாங் பூத்தே விற்பவராக" இருந்திருந்தால், அவர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருக்க மாட்டேன் என்று டாக்டர் மகாதீர் முகமட் இன்று கூறினார்.99 வயதான முன்னாள் பிரதமர் அம்னோ தலைவர் ஓர் அரசியல்வாதி மற்றும ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருந்ததால், அவமானகரமான கருத்தை தெரிவித்த பின்னர், அவர் மீது வழக்குத் தொடர முடிவு செய்ததாக உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
குட்டி என்ற பெயரைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஜாஹித் மீது மகாதீர் வழக்குத் தொடர்ந்தார். இது தம்மை இழிவுபடுத்தும் வகையில் குறிப்பதாக மகாதீர் கூறினார்.ஜூலை 30, 2017 அன்று சிலாங்கூரில் உள்ள கிளானா ஜெயாவில் நடந்த அம்னோ பிரிவு கூட்டத்தில் ஜாஹிட் அவதூறான கருத்தை தெரிவித்ததாக மகாதீர் கூறினார்.
அவர் மலாய்க்காரர் அல்லது முஸ்லிமாகப் பிறக்கவில்லை என்றும், அவரது அசல் பெயர் இஸ்கந்தர் குட்டியின் மகன் மகாதீர் என்றும் அவர் கருத்து தெரிவித்திருந்ததாக மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.மகாதீர் முகமட் என்ற பெயர் அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட ரீதியிலும் லாபம் அடைய பயன்படுத்தப்பட்டது என்பதையும் அது மறைமுகமாக உணர்த்தியது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *