ஆசிய சாம்பியன்ஸ் லீக் எலைட் 16 ஆவது சுற்றுக்கு முன்னேறியது ஜேடிதி!

top-news

கோலாலம்பூர், பிப்.20-

ஆசிய சாம்பியன்ஸ் லீக் எலைட் (ஏசிஎல்இ இன் 16ஆவது சுற்றில் விளையாடுவதற்கான வாய்ப்பை ஜேடிதி உறுதிப்படுத்தியது. இதன் விளைவாக, போஹாங் ஸ்டீலர்ஸ் அணியை 5-2 என்ற கோல் கணக்கில் இஸ்கண்டார் புத்ரியில் உள்ள சுல்தான் இப்ராஹிம்
வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் ஆட்டம் விறுவிறுப்பாக தொடங்கியது. எவ்வாறாயினும், ஹரிமாவ் செலாடன் அணியின் தாக்குதல் இடைவிடாது இலக்கை அடையத் தவறியது.

ஸ்ட்ரைக்கர் லீ ஹோஜே. போட்டியின் 26 ஆவது நிமிடத்தில் எளிதாக கோல் அடித்தார். 37ஆவது நிமிடத்தில் சுல்தான் இப்ராஹிம் அரங்கத்தில் அடித்த அடுத்த கோல் சமநிலை செய்தது.இரண்டாவது பாதியில் ஜேடிதி 52ஆவது நிமிடத்தில் பெர்க்சனின் இரண்டாவது கோலை அடித்தது. இந்த கோல் ஹரிமாவ் செலாடன் வீரர்களின் உற்சாகத்தை மேலும் தூண்டியது. 56 ஆவது நிமிடத்தில் ஆரிஃப் அய்மான் மூன்றாவது கோலை அடித்தார்.

மாற்று ஆட்டக்காரரான ஜெஸ்ஸி ரோட்ரிகஸ், முன்னேற்றத்தை உறுதிசெய்ய இடைநிறுத்த நேரத்தில் நான்காவது கோலை அடித்து ஜேடிதியை மீண்டும் முன் நிறுத்தினார். பின்னர் ஐந்தாவது கோலுக்கான பெனால்டி உதையை மாற்று வீரர் ஜோர்ஜ் ஒப்ரெகன் கோலாக மாற்றி சதர்ன் டைகர்ஸ் அணியின் வெற்றியை நிறைவு செய்தார்.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *