ஆப்கானிஸ்தான் பள்ளியில் குண்டு வெடிப்பு: 50 மாணவர்கள் படுகாயம்
- Surendran Sumdraraj
- 19 Aug, 2026
காபுல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் அருகே உள்ள பள்ளியில் நடைபெற்ற குண்டு வெடிப்பு தாக்குதலில் மாணவ-மாணவியர் சுமார் 50 பேர் படுகாயமடைந்தனர்.
தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானில், அவர்களுக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சிக் குழுக்கள் மற்றும் பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் அவ்வப்போது குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூடு போன்ற தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில், காபுல் அருகே உள்ள டேஷ் இ பெர்ஷி மாவட்டம் மெஹ்தியா பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில் கடந்த திங்கட்கிழமை குண்டு வெடிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் பள்ளியில் இருந்த மாணவ-மாணவியர் சுமார் 50 பேர் படுகாயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



