பட்டினியால் அதிகம் பாதிக்கப்பட்ட கண்டமாக ஆப்பிரிக்கா: ஐ.நா. அறிக்கை அதிர்ச்சி தகவல்

top-news
FREE WEBSITE AD

ரோம், ஜூலை 22-

உலகளவில் பட்டினியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வந்தாலும், ஆப்பிரிக்கா தற்போது பட்டினியால் அதிகம் பாதிக்கப்பட்ட கண்டமாக மாறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கை தெரிவித்துள்ளது. ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO), உலக சுகாதார அமைப்பு (WHO), யுனிசெப் உள்ளிட்ட ஐந்து சர்வதேச அமைப்புகள் இணைந்து வெளியிட்டுள்ள உலக உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து நிலை 2026 அறிக்கையில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது.

அறிக்கையின்படி, 2025-ஆம் ஆண்டில் உலகளவில் சுமார் 64.5 கோடி மக்கள் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆப்பிரிக்காவில் மட்டும் சுமார் 30.9 கோடி பேர் போதிய உணவின்றி வாழ்ந்து வருவதாகவும், ஐந்து பேரில் ஒருவர் பட்டினியால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம், பட்டினியால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையில் ஆசியாவை பின்னுக்குத் தள்ளி ஆப்பிரிக்கா முதலிடத்திற்கு வந்துள்ளது.

பருவநிலை மாற்றம், ஆயுத மோதல்கள், பொருளாதார நெருக்கடி, உணவுப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் பலவீனமான உணவு விநியோக அமைப்புகள் ஆகியவை ஆப்பிரிக்காவில் உணவுப் பாதுகாப்பு சவாலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், ஆப்பிரிக்காவில் மூன்றில் இரு பங்குக்கும் அதிகமான மக்களால் சத்தான உணவை வாங்க முடியாத நிலை தொடர்வதும் கவலைக்குரியதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *