தென் கொரியாவை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா; முதல் முறையாக நாக்அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்

top-news

மொன்டெர்ரே, ஜூன் 25 –

உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக தென்னாப்பிரிக்கா அணி நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறி புதிய சாதனை படைத்துள்ளது.

மொன்டெர்ரேயில் நடைபெற்ற 2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ‘குரூப் ஏ’ பிரிவு ஆட்டத்தில், தென்னாப்பிரிக்கா அணி தென் கொரியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

இரு அணிகளும் வெற்றிக்காகக் கடுமையாகப் போராடிய இந்த ஆட்டத்தில் முதல் பாதி கோலின்றி முடிந்தது. இரண்டாவது பாதியில் தென்னாப்பிரிக்கா தனது தாக்குதலை அதிகரித்தது. அதன் பலனாக 63-ஆவது நிமிடத்தில் தபெலோ மசேகோ கோல் அடித்து அணிக்கு முன்னிலைப் பெற்றுத் தந்தார்.

அந்தக் கோல் போட்டியின் ஒரே கோலாக அமைந்தது. பின்னர் தென் கொரியா சமநிலை கோலை தேடி பல முயற்சிகளை மேற்கொண்டாலும், தென்னாப்பிரிக்காவின் உறுதியான தற்காப்பை உடைக்க முடியவில்லை.

இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்கா அணி முதல் முறையாக உலகக் கோப்பை நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது. இது அந்த அணியின் கால்பந்து வரலாற்றில் முக்கியமான தருணமாக பார்க்கப்படுகிறது.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *