நேபாள பெருவெள்ளம் எதிரொலி: அடுத்த பெரிய அச்சுறுத்தலாக சிக்கிமின் 40 பனிப்பாறை ஏரிகள்
- Surendran Sumdraraj
- 03 Sep, 2026
புதுடெல்லி, செப். 3 –
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவான திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து, சிக்கிம் மாநிலத்தில் உள்ள பனிப்பாறை ஏரிகள் குறித்து புதிய அச்சம் எழுந்துள்ளது. சிக்கிமில் உள்ள 40 பனிப்பாறை ஏரிகள் அபாய நிலையில் இருப்பதாகத் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது.
சிக்கிம் மாநிலத்தில் 400-க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள் உள்ளன. அவற்றில் 40 ஏரிகள் ஆபத்தானவையாகவும், அவற்றில் 7 ஏரிகள் மிக அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவையாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
முன்னுரிமை அடிப்படையில் கண்காணிக்கப்படும் 16 ஏரிகளில் 13 ஏரிகள் ஏற்கனவே விரிவான அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஏரிகளில் பெரும்பாலானவை சுமார் 17 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளன. ஏரிகளின் ஆழம், நீரின் அளவு, பனிப்பாறைகளின் நிலை மற்றும் நிலச்சரிவு அபாயங்கள் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதையடுத்து, வெள்ள அபாயத்தை குறைக்கும் வகையில் சில ஏரிகளின் நீர்மட்டத்தை குறைக்க சிக்கிம் அரசு திட்டமிட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



