செயற்கைக்கோள்களின் தேவை அதிகரிப்பு: தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கம்
- Surendran Sumdraraj
- 03 Sep, 2026
திருப்பதி, செப். 3 –
இந்தியாவில் செயற்கைக்கோள்களின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். அதேவேளையில், இஸ்ரோ தனியார்மயமாக்கப்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இஸ்ரோ தலைவர் நாராயணன் மற்றும் விஞ்ஞானிகள் குழுவினர் சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், தீர்த்த பிரசாதங்களும் வழங்கப்பட்டன.
சுவாமி தரிசனத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணன், இந்தியாவின் விண்வெளித் துறையில் பல்வேறு முக்கிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
குறிப்பாக, வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி அதிகாலை 2.55 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி.-17 ராக்கெட் மூலம் புவி கண்காணிப்பு-05 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



