லஹாட் டத்து விபத்து - தந்தை பலி, மகன்கள் காயம்!

top-news
FREE WEBSITE AD

கோத்தா கினபாலு, ஆகஸ்ட் 23: லாஹாட் டத்து – தாவாவ் பகுதிக்கு இடையே நேற்று இரவு நடந்த விபத்தில் தந்தை உயிரிழந்தார். அவரது இரண்டு மகன்கள் பலத்த காயமடைந்தனர்.

இவ்விபத்து குறித்து இரவு 10 மணியளவில் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் 36 நிமிடங்களுக்குப் பிறகு ஒன்பது பேர் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது.

பாதிக்கப்பட்ட 54 வயது ரே டேவில்லா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மகன்களான 27 வயது ரெய்மர் மற்றும் 20 வயது ரெண்டல் ஆகியோர் உடனடியாக லாஹாட் டத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இறந்தவரின் உடல் மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *