IJN -ல் இருந்து மகாதீர் வீடு திரும்ப அனுமதி!
- Shan Siva
- 30 Jul, 2024
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 30: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் இரு வாரங்களுக்கு முன்பு தேசிய இருதய கழகமான IJN -இல் இருமல் காரணமாக அனுமதிக்கப்பட்ட பின்னர், தற்போது வீடு திரும்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
99 வயதான அவர் உடல் நலம் தேறி வருவதாகவும், வீட்டு விடுப்பில் செல்ல அனுமதிக்கப்பட்டதாகவும் மகாதீரின் அலுவலக செய்தித் தொடர்பாளர் சூஃபி யூசோஃப் தெரிவித்ததாக
ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
இருப்பினும் மகாதீர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகக் கூறவில்லை என்றாலும், அவர் மருத்துவமனையில் தங்கலாம் மற்றும் வெளியே இருக்க முடியும் என்று சூஃபி கூறினார்.
மகாதீர் 99 வயதை அடைந்த ஐந்து நாட்களுக்குப் பிறகு, ஜூலை 15 அன்று IJN இல் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *