பாஸ் மாநாட்டில் ஜாஹிட்! நாளை கலந்துகொள்ளலாம் என எதிர்பார்ப்பு
- Shan Siva
- 03 Sep, 2026
கோலாலம்பூர். செப் 3: பாஸ் கட்சியின் வருடாந்திரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு, அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி, பெங்காலான் செப்பாவில் நடைபெறும் பாஸ் கட்சியின் 72வது முக்தமாரில் நாளை கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாரிசான் நேஷனல்தலைவரான
அவருடன், அம்னோ பொதுச்செயலாளர் அஷ்ரஃப் வஜ்டி டுசுகி
மற்றும் மாநில அளவிலான தலைவர்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அம்னோ தலைவர்கள் கடைசியாக 2019-ல் பகாங்கில் நடைபெற்ற பாஸ் முக்தாமாரில் கலந்துகொண்டனர். அப்போது, அம்னோ மற்றும் பாஸ் கட்சிகளிடையே 'முவாஃபாகத் நேஷனல்' என்ற கூட்டணி இருந்தது. பாஸ் கட்சி, பெர்சாத்து கட்சியுடன் இணைந்து 'பெரிகத்தான் நேஷனல்' கூட்டணியை உருவாக்கிய பிறகு அந்தக் கூட்டணி முறிந்துபோனது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



