ஜாஹிட்டின் கூற்று ஒற்றுமையின் அடையாளம்! ஃபாமி ஃபாட்சில்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக் 8: அம்னோ மீதான பக்காத்தான் ஹராப்பானின் கடந்தகால தாக்குதல்களுக்கு பக்காத்தான் ஹராப்பான் மன்னிப்பு கேட்கத் தேவையில்லை என்று அம்னோ தலைவர் ஜாஹிட் ஹமிடி கூறியது அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் உள்ள ஒற்றுமையைக் காட்டுகிறது என்று ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

PH இன் தகவல் பிரிவுத்  தலைவர் ஃபஹ்மி, ஜாஹிட்டின் நிலைப்பாட்டை முழுமையாக ஆதரிப்பதாகக் கூறினார். இந்த ஒற்றுமை நாட்டிற்கு நன்மை பயக்கும் என்று உலக அஞ்சல் தின கொண்டாட்டங்களைத் தொடங்கி வைத்து பிறகு  அவர் கூறினார்.

அரசியல் ஸ்திரத்தன்மை பலனளிக்கிறது என்று குறிப்பிட்ட அவர்,  வலுவடைந்து வரும் ரிங்கிட், அதிகரித்து வரும் முதலீடுகள் மற்றும் வளர்ந்து வரும் வர்த்தகம் போன்ற  பலனை ஸ்திரத்தன்மை தந்துள்ளது என்று அவர் விளக்கினார்.

கடந்த ஆண்டை விட ரிங்கிட் வலுவடைகிறது, முதலீடுகள் அதிகரித்து வருகின்றன, வர்த்தகம் அதிகரித்து வருகிறது, மலேசியா ஒன்றன் பின் ஒன்றாக வெற்றியை அடைந்து வருகிறது என்று வர்ணித்தார்.

நேற்று ஜாஹிட் கூறியது அனைத்து தரப்பினராலும் எளிதில் புரிந்து கொள்ளப்படுகிறது. நமது நாட்டிற்கு சிறந்ததைச் செய்ய விரும்புகிறோம், தற்போதைய நிலைத்தன்மை மற்றும் அரசாங்கக் கட்சிகளிடையே ஒற்றுமையுடன், மலேசியா உலக அரங்கில் மிகவும் மதிக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்  என்று அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *