மக்கோத்தா PN வேட்பாளராக கால்பந்து பயிற்சியாளர் தேர்வு!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, செப் 11: செப்டம்பர் 28-ம் தேதி நடைபெறும் மக்கோத்தா இடைத்தேர்தலில் பெரிகாத்தான் நேஷனல் வேட்பாளராக பயிற்சியாளர் ஹைசான் என்று அழைக்கப்படும் குளுவாங் பெர்சாத்து கமிட்டி உறுப்பினர் ஹைசான் ஜாஃபரை நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது கால்பந்து பயிற்சியாளராக பணிபுரியும் ஹைசான், ஜொகூர் கால்பந்து சங்கத்தின் கீழ் விளையாடிய முன்னாள் கால்பந்து வீரர் என்று பெரிக்காத்தான் நேஷனல் பொதுச்செயலாளர் ஹம்சா ஜைனுடின் தெரிவித்தார்.

இளைஞர்களுடனான நெருக்கம் அவரை அப்பகுதியில் உள்ள பல இன சமூகத்தினரிடையே ஒரு பிரபலமான நபராக ஆக்கியுள்ளது என்றும், பெரிக்காத்தானுக்கு வாக்கெடுப்பில் முன்னிலையை அளித்துள்ளது என்றும் ஹம்சா கூறினார்.
மூன்று பிள்ளைகளுக்குத் தந்தையான இவர், குளுவாங் முனிசிபல் கவுன்சிலில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். மேலும்  தனது சொந்த உணவு வியாபாரத்தையும் நடத்தி வருகிறார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *