ஏஐயால் சில மோசமான விளைவுகள் ஏற்படலாம்: சாம் ஆல்ட்மேன் எச்சரிக்கை

top-news

வாஷிங்டன், அக். 7: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் சில எதிர்மறையான விளைவுகள் ஏற்படலாம் என்றும், அதன் நன்மைகளைப் பெறுவதற்காக சில ஆபத்துகளை சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கலாம் என்றும் ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார்.

செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பேசிய அவர், செயற்கை நுண்ணறிவு பொதுமக்களுக்குப் பரவலாக கிடைக்க வேண்டும் என்றும், அதன் பயன்பாட்டில் மக்களுக்குப் போதுமான சுதந்திரம் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

பெரிய அளவிலான ஹேக்கிங், தவறான பயன்பாடு மற்றும் மோசடி போன்ற பிரச்சினைகளை முற்றிலும் தடுக்க வேண்டும் என்பதற்காக ஏஐ பயன்பாட்டை அதிகமாக கட்டுப்படுத்தும் அணுகுமுறையை தாம் ஏற்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். ஏஐ மூலம் ஏற்படக்கூடிய பாதிப்புகளை விட, அதன் மூலம் மக்கள் செய்யக்கூடிய நன்மைகள் பல மடங்கு அதிகமாக இருக்கும் என்றும் ஆல்ட்மேன் தெரிவித்தார்.

அதேவேளை, செயற்கை நுண்ணறிவால் மிகப்பெரிய அளவிலான பேரழிவு ஏற்படும் அபாயங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *