லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி!

top-news

மாட்ரிட், பிப்.24-

லா லீகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணியினர் வெற்றி பெற்றனர்.கிரான் கனேரா அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் லாஸ் பால்மாஸ் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பார்சிலோனா அணியினர் 2-0 என்ற கோலில் லாஸ் பால்மாஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.பார்சிலோனா அணியின் கோல்களை டேனி ஒய்மா, பெரான் தோரஸ் ஆகியோர் அடித்தனர்.

மற்றோர் ஆட்டத்தில் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் வெலன்சியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர். மற்ற ஆட்டங்களில் வில்லாரியல், ஸ்பான்யோல் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *