அரசுத் துறைத் தலைவர்களுக்குப் பதவி உயர்வு இல்லை! ஊழல் நடப்பதைத் தெரிவிக்கத் தவறினால்... - அன்வார் திட்டவட்டம்

top-news
FREE WEBSITE AD


புத்ராஜெயா, ஜூன் 10: அரசுத் துறைகள் அல்லது பிரிவுகளின் தலைவர்கள் அந்தந்தப் பகுதிகளில் ஏதேனும் ஊழல்கள் நடப்பதாகத் தெரிவிக்கத் தவறினால் அவர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்படாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

அரசு ஊழியர்களின் சம்பள சீரமைப்பு தொடர்பான முடிவு குறித்து அடுத்த ஓரிரு நாட்களில் நடைபெறும் கூட்டத்தில் அரசின் தலைமைச் செயலாளரிடம் ஆலோசனை வழங்க உள்ளதாகப் பிரதமர் தெரிவித்தார்.

"அரசுத் துறைகள் அல்லது பிரிவுகளின் தலைவர்கள் தங்கள் அமைப்புகளுக்குள் நிகழும் ஊழலைப் புகாரளிக்கத் தவறினால் அவர்களுக்குப் பதவி உயர்வு வழங்குவதைத் தடுக்கும் ஒரு விதியை நாங்கள் உருவாக்குவோம்," என்று இன்று நடைபெற்ற பிரதமர் துறை (ஜேபிஎம்) மாதாந்திர உரையில் கூறினார்.

துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி மற்றும் துணைப் பிரதமர் II டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசோப் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) மற்றும் பிற அதிகாரிகள் தங்கள் பணிகளில் சிறப்பாகச் செயல்பட்டாலும், அரசாங்கத் துறைத் தலைவர்கள் மற்றும் பிரிவுகளும் தங்கள் பங்கை ஆற்ற வேண்டும் என்று அன்வார் கூறினார்.

குறிப்பிட்ட சில துறைகள் தவறு செய்வதாகத் தெரிந்தால், தலைமை ஏன் அதைத் தெரிவிக்கவில்லை? ஏன் துறைத் தலைவருக்குத் தெரியவில்லை? சில சமயங்களில் இதுபோன்ற நடைமுறைகளை அவர்கள் அறியாமல் இருக்க முடியாது என்று நினைக்கிறேன்” என்று அவர் மேலும் கூறினார்.

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் தலைமைக் கணக்காய்வாளர்  அறிக்கையில் சில முன்னேற்றங்கள் காணப்பட்டாலும், நாட்டின் நிலைமையை மேம்படுத்த இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டியுள்ளது என்றும் பிரதமர் கூறினார்.

"மலேசியா தூய்மையான மற்றும் ஊழல் வழக்குகள் குறைவாக உள்ள நாடாக அறியப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று அன்வார் கூறினார்!

 

.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *