ஐஸ்வர்யா ராஜேஷின் “ஓ சுகுமாரி” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

top-news
FREE WEBSITE AD

சென்னை, ஜூலை 1 –

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் திருவீர் நடித்துள்ள “ஓ சுகுமாரி” திரைப்படம் வரும் ஜூலை 17-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பரத் தர்ஷன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள காதல் மற்றும் குடும்பக் கதையை மையமாகக் கொண்ட இப்படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் “தாமினி” என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் திருவீர் நாயகனாக நடித்துள்ளதுடன், ஜான்சி, விஷ்ணு ஓ லட்டு, ஆமணி, முரளிதர், ஆனந்த், அஞ்சிமாமா, சிவானந்த், கோட்டா ஜெயராம், கவிரெட்டி ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சி.எச். குஷேந்தர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு பரத் மஞ்சிராஜு இசையமைத்துள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *