நஜிப் வீட்டுக் காவல் விவகாரம்! பொதுமக்களுக்குத் தெளிவான விளக்கம் கொடுங்கள்! பெர்சாத்து கோரிக்கை!

top-news

கோலாலம்பூர், செப் 19: எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் (SRC International) வழக்கில் முன்னாள் பிரதமர் நjஜிப் ரசாக் பெற்ற நிபந்தனைக்குட்பட்ட மன்னிப்பின் ஒரு பகுதியாக, அவர் மீது விதிக்கப்பட்டுள்ள வீட்டுக் காவல் தொடர்பான அனைத்து நிபந்தனைகளையும் அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்று பெர்சாத்து (Bersatu) கட்சி வலியுறுத்தியுள்ளது.

மன்னிப்பு முடிவு வெளியானதைத் தொடர்ந்து எழுந்துள்ள கேள்விகள் மற்றும் கவலைகளைக் கருத்தில் கொண்டு, இந்த நிபந்தனைகள் குறித்து மலேசிய மக்களுக்கு விரிவாகத் தெரிவிக்கப்பட வேண்டும் என்று பெர்சாத்து பொதுச் செயலாளர் அஸ்மின் அலி கூறினார்.

நீதித்துறையின் நேர்மை மற்றும் நமது சட்ட அமைப்பின் மீதான பொதுமக்களின் நம்பிக்கைக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய மக்கள் கோபம் மற்றும் அமைதியின்மையைத் தவிர்க்க, இந்த விவரங்களை வெளிப்படுத்துவது முக்கியம், என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

வீட்டுக் காவலுக்கான சட்டக் கட்டமைப்பு, நடைமுறைகள் மற்றும் அளவுகோல்கள் குறித்தும், மற்ற கைதிகளும் இதேபோன்ற 'சலுகையைப்' பெற விண்ணப்பிக்க முடியுமா என்பது குறித்தும் அரசாங்கம் விளக்க வேண்டும் என்று அஸ்மின் கூறினார்.

ஊழல் குற்றவாளிகள் சட்டம் மற்றும் கூட்டாட்சி அரசியலமைப்பின்படி தண்டிக்கப்பட வேண்டும் என்பதே பெர்சத்து கட்சியின் நிலைப்பாடு; அதேவேளையில், அரசியலமைப்பின் 42-வது பிரிவு மன்னருக்கு மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தை அளிக்கிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கை தொடர்பாக மக்களிடையே எழுந்துள்ள கேள்விகளை பெர்சாத்து புரிந்துகொள்கிறது.

ஒருவரின் பதவி, செல்வாக்கு அல்லது பின்னணி ஆகியவற்றின் அடிப்படையில் தனிப்பட்ட தண்டனை முறைகள் இருக்கக்கூடாது என்ற நம்பிக்கையைப் பெற மக்களுக்கு உரிமை உண்டு  என்று அவர் கூறினார்! 

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *