ரஜினிகாந்த் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து போயஸ் கார்டன் இல்லத்திற்கு திரும்பினார்!

top-news

கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி திடீரென்று ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கே அவருக்கு வயிறு தொடர்பான பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ரத்தநாளங்களில் வீக்கம் ஏற்பட்ட நிலையில் ஸ்டன்ட் கருவி ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டதாகவும் இரண்டு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.இந்நிலையில் நேற்று இரவு 11:00 மணி அளவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டுக்கு பூரண நலத்துடன் திரும்பியுள்ளார்.

இன்று காலையிலேயே ரஜினிகாந்த் வீடு திரும்பிய செய்திகள் வெளியாகி ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது. ரஜினிகாந்த் நான் யானை இல்ல குதிரை என்று சும்மா மேடைப் பேச்சுக்காக ஒன்றும் சொல்லவில்லை என்றும் ஒவ்வொரு முறையும் மருத்துவமனைக்கு செல்லும் போதெல்லாம் உடனடியாக நலம் பெற்று அவர் ரசிகர்களின் பெரும் சக்தியுடன் திரும்பி வருகிறார், வருவார் என ரசிகர்கள் ரஜினிகாந்த் நலம் பெற்று வீடு திரும்பியதை கொண்டாடி வருகின்றனர்.



https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *