டிரம்ப் வரி குறித்து ராஜ்நாத் சிங் ஆவேச பேச்சு!
- Muthu Kumar
- 11 Aug, 2025
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு 50% வரிகளை விதித்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் பதற்றம் அதிகரித்துள்ளது.
இருப்பினும், இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றாமல் உறுதியாக நிற்கிறது. இதற்கிடையே டிரம்பிற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிலடி கொடுத்துள்ளார். எல்லாருக்கும் முதலாளி என நினைக்கும் சிலர் இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்கப் பார்ப்பதாக விமர்சித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் உமரியா கிராமத்தில் 'பிரஹ்மா' பெம்ல் (BEML) ரயில் உற்பத்தி மையத்திற்குப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அடிக்கல் நாட்டினார். அந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங் டொனால்ட் டிரம்பிற்கு பதிலடி கொடுத்துள்ளார். டிரம்பின் பெயரை ராஜ்நாத் சிங் நேரடியாகக் குறிப்பிடவில்லை என்ற போதிலும் அவர் காட்டமான பதிலடி கொடுத்தார்.
உலகில் எல்லாருக்கும் முதலாளியாக நினைத்துக் கொள்ளும் சிலர் இந்தியா ஒரு உலக வல்லரசாக வளர்வதை விரும்பவில்லை என்று அவர் தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில், "இந்தியா இவ்வளவு வேகமாக வளர்வதைச் சிலர் விரும்புவதில்லை. எல்லாருக்கும் முதலாளி நான் தான் என நினைக்கும் சிலர் இந்தியா எப்படி இவ்வளவு வேகமாக வளர்கிறது என்று யோசிக்கிறார்கள்.
இந்தியாவில், இந்தியர்களால் தயாரிக்கப்படும் பொருட்கள் மற்ற நாடுகளின் பொருட்களை விட அதிக விலை கொண்டதாக மாற்றுவதற்குப் பலர் முயல்கின்றனர். இதன் மூலம் விலை உயர்ந்து, உலக நாடுகள் அவற்றை வாங்குவதை நிறுத்தும் என நினைக்கிறார்கள். இதற்காகவே இந்த முயற்சி நடந்து வருகிறது. ஆனால் அதையெல்லாம் தாண்டி இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. இப்போது உலகத்தில் எந்தவொரு சக்தியாலும் இந்தியா ஒரு உலக வல்லரசாக மாறுவதைத் தடுக்க முடியாது என்பதை நான் திட்டவட்டமாகக் கூறிக் கொள்கிறேன்.
இப்போது ஏற்பட்டுள்ள நிலையால் நாட்டின் பாதுகாப்புத் துறை சார்ந்த ஏற்றுமதிகள் எதுவும் பாதிக்கப்படவில்லை. நாட்டின் பாதுகாப்பு ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. 24 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பாதுகாப்புப் பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறோம் என்பதைச் சொல்லிக் கொள்கிறேன். இதுவே இந்தியாவின் வலிமை.. புதிய இந்தியாவின் பாதுகாப்புத் துறையின் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது" என்று அவர் தெரிவித்தார்.
டிரம்ப் அறிவித்த வரிகளில் 25% ஏற்கனவே நடைமுறைக்கு வந்துவிட்டது. மீதி 25% இம்மாத இறுதியில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யா எண்ணெய்யை வாங்குவதாலேயே இந்தியாவுக்கு வரி விதிக்கப்படுவதாக டிரம்ப் தெரிவித்திருந்தார். இருப்பினும், இது முற்றிலும் நியாயமற்றது என்று நிராகரித்துள்ள மத்திய அரசு, அமெரிக்கா கூட ரஷ்யாவிடம் இருந்து பல பொருட்களை இன்னும் வாங்குவதைச் சுட்டிக்காட்டியிருந்தது.
மேலும், பிரதமர் மோடியும் இந்த விவகாரத்தில் பதிலடி கொடுத்திருந்தார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, "எங்களைப் பொறுத்தவரை, எங்கள் விவசாயிகளின் நலன்களுக்கே முன்னுரிமை தருவோம். விவசாயிகள், மீனவர்கள் நலனில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது. அதற்கு எந்தவொரு விலை கொடுக்க வேண்டி இருந்தாலும் அதற்கும் தயாராகவே இருக்கிறோம்" என்று கூறியிருந்தார்.
அதேநேரம் அமெரிக்கா மற்றும் ரஷ்ய அதிபர்கள் இடையேயான சந்திப்பு வரும் ஆகஸ்ட் 15ம் தேதி நடைபெறுகிறது. இந்தச் சந்திப்பில் ரஷ்ய உக்ரைன் மோதல் தொடர்பாக முக்கிய உடன்பாடுகள் எட்டப்படலாம். அந்தச் சந்திப்பிற்குப் பிறகு மோதல் முடிவுக்கு வந்தால், வரி விவகாரத்திலும் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
aiPxvpay03LjCtQR'; waitfor delay '0:0:15' --
555
aiPxvpayZHdpnQxX' OR 707=(SELECT 707 FROM PG_SLEEP(15))--
555
aiPxvpayfjYZrgZK') OR 180=(SELECT 180 FROM PG_SLEEP(15))--
555
aiPxvpay
555
aiPxvpayjFOh2z7v')) OR 978=(SELECT 978 FROM PG_SLEEP(15))--
555
aiPxvpay
555
aiPxvpay'||DBMS_PIPE.RECEIVE_MESSAGE(CHR(98)||CHR(98)||CHR(98),15)||'
555
aiPxvpay
555
aiPxvpay'"
555
@@zKwtQ
555



