பாரிசானுடன் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வைக்காது! PH திட்டவட்டம்
- Shan Siva
- 30 Sep, 2026
கோலாலம்பூர், செப் 30: வரவிருக்கும் மலாக்கா மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல் (BN) கட்சியுடன் பக்காத்தான் ஹராப்பான் (PH) கூட்டணி அமைக்காது என்று அமானா கட்சியின் தகவல் தொடர்பு இயக்குனர் காலிட் சமாட் தெரிவித்துள்ளார்.
BN மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் (PN) ஆகிய கட்சிகளைத் தவிர, வேறு எந்தக் கட்சியுடனும் இணைந்து பணியாற்றத் தங்கள் கூட்டணி தயாராக இருப்பதாக காலிட் கூறினார்.
BN-உடன் இணைந்து பணியாற்றுவதற்கான எந்தவொரு முன்மொழிவையும் நாங்கள் ஏற்கமாட்டோம். BN கட்சி PN-உடன் இணைந்து பணியாற்ற விரும்பினால், அது அவர்களின் உரிமை மற்றும் அவர்களின் விருப்பம் சார்ந்த விஷயமாகும்.
PH-ஐப் பொறுத்தவரை, நாங்கள் எங்கள் கொள்கைகளின் அடிப்படையிலேயே தேர்தலில் போட்டியிடுவோம் என்று அவர் கூறினார்.
மலாக்காவில் உள்ள ஒரு ஹோட்டலில் பெர்சாத்து (Bersatu) மற்றும் PH தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மறுநாளே அவரது இந்தக் கருத்துகள் வெளியாகியுள்ளன.
பெர்சாத்து கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் துன் பைசால் இஸ்மாயில் அஜீஸ், தேர்தல் இயக்குனர் அலி முகமது, இணைப் பிரிவுத் தலைவர் ஆர். ஸ்ரீ சஞ்சீவன் மற்றும் மலாக்கா தகவல் பிரிவுத் தலைவர் ஹிஷாமுதீன் கரீம் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் அடங்குவர்.
மலாக்கா அமானா தலைவர் அஷ்ரஃப் முக்லிஸ் மிங்காட் மற்றும் மலாக்கா PKR-இன் தற்காலிகத் தலைவர் ஆடம் அட்லி ஆகியோரும் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், PH தகவல் தொடர்பு இயக்குனர் ஃபஹ்மி ஃபட்ஸில் மலாக்கா தேர்தலுக்கான கூட்டணி குறித்து பெர்சாத்து கட்சியுடன் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகளைத் தங்கள் கூட்டணி இன்னும் தொடங்கவில்லை என்று ஃபஹ்மி கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

