விருப்பமான முஸ்லீம் இடமாக லங்காவியை மாற்ற வேண்டும்!- துணை அமைச்சர் பரிந்துரை

top-news
FREE WEBSITE AD

லங்காவியை "விருப்பமான முஸ்லிம் இடமாக" மாற்ற வேண்டும் என்று சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார துணை அமைச்சர் கைருல் ஃபிர்தௌஸ் அக்பர் கான் பரிந்துரைத்துள்ளார்.

மலேசியா மற்ற நாடுகளுடன் போட்டியிடுவதற்கான ஒரு வழி முக்கிய துறைகளில் கவனம் செலுத்துவதாகும் என்று கைருல் கூறினார்.

பிராந்தியத்தில் உள்ள மற்ற தீவுகளுடன் லங்காவி போராடக்கூடும் என்பதை தாங்கள் அறிவோம் என்றும், எனவே, லங்காவியை முஸ்லீம்களின் விருப்பமான இடமாக நிலைநிறுத்த பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் குடும்பம் சார்ந்ததாகவும், ஆன்மீக அம்சங்களில் கவனம் செலுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்" என்று அவர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

 

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *