ஏகேபிஎஸ் பெயரில் போலி ஒப்புதல் கடிதம்: நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக. 12-

மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமை (AKPS), பொருட்கள் விநியோகம் தொடர்பான நடவடிக்கைகளுக்காகத் தனது தலைமை இயக்குநரின் கையொப்பம் மற்றும் அதிகாரிகளின் அடையாளங்களைப் பயன்படுத்தி போலியான ஒப்புதல் கடிதங்கள் (SST) தயாரிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்துள்ளது.

தந்திரோபாய பாதுகாப்பு உடைகள், மின்சார ஜெனரேட்டர்கள் (genset) மற்றும் எழுதுபொருட்கள் உள்ளிட்ட பொருட்களை விநியோகிப்பது தொடர்பாக தங்களுக்கு கிடைத்த புகார்களைத் தொடர்ந்து இந்த மோசடி ஆவணங்கள் கண்டறியப்பட்டதாக AKPS தெரிவித்துள்ளது.

நிறுவனங்களை நம்ப வைக்கும் நோக்கில், அந்த ஆவணங்களில் AKPS-இன் அதிகாரப்பூர்வ ஆவணத் தலைப்பை ஒத்த போலியான கடிதத் தலைப்பும் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

AKPS வெளியிட்ட அறிக்கையில், தனது தலைமை இயக்குநர் மற்றும் அதிகாரிகளின் பெயர்களைத் தவறாகப் பயன்படுத்தியது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தற்போது மேலதிக விசாரணை மற்றும் நடவடிக்கைகளுக்காகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *