அயர்லாந்து - இஸ்ரேல் ஆட்டம் டிரா

top-news

பாக்கா டோபோலா, அக். 5 –

யூஃபா நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரில் அயர்லாந்து மற்றும் இஸ்ரேல் அணிகள் மோதிய இரண்டாவது ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. அரசியல் பதற்றம் சூழ்ந்த நிலையில் நடைபெற்ற இந்தப் போட்டியுடன், கடந்த இரண்டு வாரங்களாக இரு அணிகளையும் சுற்றியிருந்த சர்ச்சைகளும் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளன.

இந்த ஆட்டத்தை புறக்கணிக்க வேண்டும் என்று அயர்லாந்தில் சில ஆதரவாளர்களும் அரசியல் பிரமுகர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனால் போட்டியை முன்னிட்டு பெரும் விவாதம் ஏற்பட்டது.

முன்னதாக, கடந்த வாரம் ஹங்கேரியில் பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெற்ற முதல் சந்திப்பில் அயர்லாந்து அணி 3-0 என்ற கோல் கணக்கில் இஸ்ரேலை வீழ்த்தியிருந்தது.

இரண்டாவது ஆட்டம் முடிந்த பிறகு பேசிய அயர்லாந்து அணியின் ஐஸ்லாந்து நாட்டைச் சேர்ந்த பயிற்சியாளர் ஹெய்மிர் ஹால்கிரிம்சன், கடந்த இரண்டு வாரங்களாக அணியினர் கடும் அழுத்தத்தை சந்தித்ததாகத் தெரிவித்தார்.

“எல்லாம் முடிந்துவிட்டதில் மிகுந்த நிம்மதி அடைகிறேன். இந்த காலகட்டம் எங்கள் அனைவருக்கும் அழுத்தமானதாக இருந்தது. கடினமான சூழ்நிலையிலும் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். வேறு எந்த தேசிய அணியும் நாங்கள் சந்தித்ததைப் போன்ற சூழலை எதிர்கொள்ள வேண்டாம் என்று நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *