தன்னார்வமாக சிகிச்சை பெற முன்வந்த 2,145 போதைப்பொருள் தொடர்புடையோர்

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஆக. 18-

 போதைப்பொருள் மற்றும் போதைப் பொருட்களைத் தவறாகப் பயன்படுத்துவோர் தொடர்பான சிகிச்சை மற்றும் மறுவாழ்வுக்காக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமல்படுத்தப்பட்ட 1983ஆம் ஆண்டின் சட்டம் 283-ன் கீழ், இதுவரை 2,145 பேர் தன்னார்வமாகச் சிகிச்சை பெற்றுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுதீன் நசூதின் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

அவர்களில் 1,401 பேர் சமூக அடிப்படையிலான சிகிச்சையைப் பெற்றுள்ள நிலையில், மேலும் 744 பேர் நிறுவன அடிப்படையிலான சிகிச்சையைப் பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கை, திருத்தப்பட்ட சட்டத்தை அமல்படுத்தியதன் மூலம் நேர்மறையான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை வெளிப்படுத்துவதாக அமைச்சர் கூறினார்.

புத்ராஜெயாவில் நடைபெற்ற உள்துறை அமைச்சகத்தின் மாதாந்திர கூட்டத்தில் பேசிய அவர், போதைப்பொருள் தொடர்பான பிரச்சினையில் சிக்கியுள்ளவர்கள் தாமாக முன்வந்து சிகிச்சை பெறுவதற்கு சட்டத் திருத்தம் வழிவகுத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

“சட்டத்தில் திருத்தம் செய்ததன் மூலம், போதைப்பொருள் பிரச்சினையில் ஈடுபட்டுள்ளவர்களைத் தாமாக முன்வந்து சிகிச்சை பெறுவதற்கு ஈர்க்க முடிந்துள்ளது. ஓராண்டு காலத்தில் பதிவாகியுள்ள இந்த எண்ணிக்கை நிச்சயமாக பாராட்டத்தக்க முடிவாகும்,” என்றார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *