மலாக்கா தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை நிறைவுபெற்றுவிட்டது! - ஜாஹிட்
- Shan Siva
- 05 Oct, 2026
ஷா ஆலம், அம 5: மலாக்கா தேர்தலுக்கான சாத்தியமான கூட்டணிக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தைகளை பாரிசான் நேஷனல் (BN) கிட்டத்தட்ட நிறைவு செய்துவிட்டதாகவும், இந்த வாரம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அதன் முடிவை வெளியிடும் என்றும் BN தலைவர் அகமது ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
அம்னோ (Umno) தலைவருமான ஜாஹிட், சம்பந்தப்பட்ட கட்சிகளுடனான" பேச்சுவார்த்தைகள் "சுமார் 95% நிறைவடைந்துவிட்டதாகக்" கூறினார்.
அக்டோபர் 7-ஆம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரை நாங்கள் காத்திருப்போம். அதன்பிறகு, மலாக்கா தேர்தலில் எந்தக் கூட்டணியுடன் இணைந்து செயல்படுவது அல்லது யாருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வது என்பது குறித்து அறிவிப்போம் என்று மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
வெள்ளிக்கிழமையன்று, அம்னோவுடனான தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் சுமார் 90% நிறைவடைந்துள்ளதாக PAS-இன் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் தெரிவித்திருந்தார். PAS கட்சி BN-இன் சின்னத்தின் கீழ் போட்டியிடுமா என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று ஜாஹிண்ட் இன்று கூறினார். இருப்பினும், PAS தனது சொந்தச் சின்னத்தைப் பயன்படுத்துவதற்கும் BN தயாராகவே உள்ளது என்றார்.
பக்காத்தான் ஹராப்பானுடன் (PH) பேச்சுவார்த்தை நடத்த BN தயாராக உள்ளதா என்று கேட்கப்பட்டபோது, அதற்கும் தாங்கள் தயாராகவே இருப்பதாக ஜாஹிட் பதிலளித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

