ஹலால் அந்தஸ்து என்பது பன்றி இறைச்சி & மது சம்பந்தப்பட்டது மட்டும் அல்ல... - அன்வார்
- Shan Siva
- 17 Sep, 2024
கோலாலம்பூர், செப் 17: ஹலால் அந்தஸ்து என்பது பன்றி இறைச்சி அல்லது மதுவை மட்டும் சம்பந்தப்பட்டது இல்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
ஹலாலின் வரையறை விரிவடைந்து வருகிறது என்று குறிப்பிட்ட அவர்,
ஹலால் பற்றிய பாரம்பரிய பார்வை இப்போது இல்லை என்று கூறினார்.
ஹலால் என்பது (உணவு) பாதுகாப்பு, தூய்மை மற்றும் தீங்கிழைக்கும் பொருட்களைத் தவிர்ப்பதற்கான அதிநவீன முறைகளைப் பயன்படுத்துவதையும் குறிக்கிறது என்று மலேசிய சர்வதேச ஹலால் ஷோகேஸ் 2024 (மிஹாஸ்) திறப்பு விழாவில் அன்வார் இதனை தெரிவித்தார்.
ஹலால் தயாரிப்புகள் சர்வதேச அளவில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டதை விட கடுமையான தரங்களை சான்றிதழில் கோருவதால், உலகளவில் போட்டித்தன்மையுடன் இருக்க முடியும் என்று அன்வார் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *